அடேங்கப்பா ! பி.சி.சி.ஐ யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா ! பணக்கார கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ) 2018-19 நிதியாண்டின் சொத்து மதிப்பு 14,489.80 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பி.சி.சி.ஐ உருவெடுத்துள்ளது.மேலும் 2018-19ஆம் ஆண்டிற்கான அதன் இருப்புநிலை ரூ.14,489.80 கோடி மதிப்புள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது .

செய்தி நிறுவனமான ஐஏஎன்எஸ்ஸின் அறிக்கையின்படி, பிசிசிஐ ரூ.4,017.11 கோடியை வருமானமாகவும், அதில் பாதி – ஐபிஎல் 2018 இலிருந்து ரூ .2,407.46 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.

பி.சி.சி.ஐ. யின் இரண்டாவது பெரிய வருமான இந்திய கிரிக்கெட் அணியின் ஊடக உரிமைகளிலிருந்து வந்ததுள்ளது.இந்த ஊடக உரிமைகள் மூலம் பி.சி.சி.ஐ 828 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது, ஆனால் அதே ஆண்டில் 1,592.12 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.இருப்பினும், 2019-20 ஆம் ஆண்டிற்கான இருப்புநிலை இன்னும் தயாராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.