Tuesday, April 20, 2021
HomeCricketடெஸ்டில் முதல் பெண் நடுவராக களமிறங்கிய கிளாரி போலோசாக்..!

டெஸ்டில் முதல் பெண் நடுவராக களமிறங்கிய கிளாரி போலோசாக்..!

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு கிளாரி போலோசாக் என்ற பெண் 4-வது நடுவராக நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன் 2019-ஆம் ஆண்டு நமீபியா, ஓமன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐ.சி.சி. யின் 2-ஆம் நிலை ஒரு நாள் போட்டியில் நடுவராக இருந்தார்.

ஐ.சி.சி விதி படி போட்டி நடக்கும் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் நடுவராக நியமிக்க அனுமதி உள்ளதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கிளாரி போலோசாக்வை  தேர்வு செய்தது. போட்டியில் பந்து மாற்றும்போது அதை கொண்டுவருவது, இடைவேளையின் போது மைதானத்தை ஆய்வு செய்வது, 3-வது நடுவருக்கு மாற்றாக செயல்படுவது 4-வது நடுவரின் பணிகள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments