Tuesday, September 21, 2021
HomeSportsஒலிம்பிக் பதக்கங்களை தயாரிக்க 32 கிலோ தங்கம் 3,500 கிலோ வெள்ளி, 2,200 கிலோ வெண்கலம்..!

ஒலிம்பிக் பதக்கங்களை தயாரிக்க 32 கிலோ தங்கம் 3,500 கிலோ வெள்ளி, 2,200 கிலோ வெண்கலம்..!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 339 பந்தயங்களில் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. அத்துடன் 2-வது,3-வது இடம் பெறுபவர்களுக்கு முறையே வெள்ளி வெண்கலப்பதக்கம் அளிக்கப்படும். குழு போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணியில் உள்ள அனைவரது கழுத்தையும் தங்கப்பதக்கம் அலங்கரிக்கும். குத்துசண்டை மற்றும் மல்யுத்தம் பொட்டில் அரைஇறுதியில் தோற்றுபோனவர்களுக்கு வெண்கலப்பதக்கம் வழக்கப்படும்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து பார ஒலிம்பிக் போட்டியும் அங்கு ஆகஸ்ட் 24-ந் தேதி தொடங்கி நடைபெறுகிறது.இந்த இரண்டு போட்டிகளுக்காக ஏறக்குறைய 5 ஆயிரம் பதக்கங்கள் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. வழக்கம் போல பதக்கத்தின் முன்பக்கத்தில் கிரேக்கத்தின் வெற்றி கடவுளான நைக்கி ஏதெனிஸ்  ஸ்டேடியம் மும்பு நிற்பது போன்றும், ஒலிம்பிக் வளையம் மற்றும் நடப்பு ஒலிம்பிக் போட்டியின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் ஜப்பான் கலைஞர் வடிவமைத்த போட்டி சின்னம் ஒலிம்பிக் வளையம் ஆகியவை இடம் பேற்றுள்ளன.

ஒலிம்பிக் பதக்கங்களை தயாரிக்க மொத்தம் 32 கிலோ தங்கம் 3,500 கிலோ வெள்ளி, 2,200 கிலோ வெண்கலம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments