Monday, September 20, 2021
HomeCricketஇன்று கிரிக்கெட் வரலாற்றின் டான் பிராட்மேன் பிறந்தநாள்- சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் அஞ்சலி..!

இன்று கிரிக்கெட் வரலாற்றின் டான் பிராட்மேன் பிறந்தநாள்- சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் அஞ்சலி..!

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த நாயகன் மறைந்த டான் பிராட்மேனின் பிறந்தநாளான இன்று சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஆகஸ்ட் 27, 1908 இல் பிறந்த ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட்வீரரான டொனால்ட் ஜார்ஜ் பிராட்மேன் கிரிக்கெட் வரலாற்றில் உலகளவில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஏனெனில்,இவர் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,996 ரன்கள் சேர்த்து தனது சராசரியை 99.94 என வைத்துள்ளார்.இதனால்,டெஸ்ட் போட்டிகளில் பிராட்மேன் வைத்துள்ள பேட்டிங் சராசரியை இதுவரை எந்தநாட்டு பேட்ஸ்மேன்களும் முறியடிக்கவில்லை.இதன்காரணமாகவே,இவர் கிரிக்கெட்டின் டான் எனவும் அழைக்கப்படுகிறார்.

மேலும்,இவர் 338 முதல் தர போட்டிகளில் பங்கேற்று,28 ஆயிரத்து 67 ரன்கள் குவித்து, 95.14 சராசரி வைத்துள்ளார்.பிராட்மேனின் சாதனையை பாராட்டி ஆஸ்திரேலியா அரசு அவரது உருவம் தபால் தலைகள் மற்றும் நாணயங்களை வெளியிட்டது,மேலும்,அவரது சிறப்பை குறிக்கும் வகையில் ஒரு அருங்காட்சியகம் அவர் உயிருடன் இருந்தபோது திறக்கப்பட்டது.

இவ்வாறு,கிரிக்கெட் உலகமே இன்றளவும் கொண்டாடும் டான் பிராட்மேன், பிப்ரவரி 2001 ஆம் ஆண்டு 25 ஆம் தேதி,தனது 92 வயதில் நிமோனியாவால் இறந்தார்.

இந்நிலையில், மறைந்த டான் பிராட்மேனின் பிறந்த நாளான இன்று,அவரது சாதனையை நினைவு கூறும் விதமாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக ஊடகங்களில் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்,இந்தியாவின் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர்,டான் பிராட்மேனின் பிறந்த நாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”சர் டான் பிராட்மேனின் பேட்டிங் நுட்பம்,  டெஸ்ட் விளையாட்டுகளில் இன்றளவும்  சிறந்து விளங்குகிறது. விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ள பெண்களையும் ஆண்களையும் நீங்கள் என்றென்றும் ஊக்குவிப்பீர்கள்.சர் டான் உங்கள் பிறந்தநாளில்,உங்களை நினைத்துக் கொள்கிறேன்”,என்று கூறி அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி டான் பிராட்மேனின் 90-வது பிறந்தநாளின் போது,அவரது இல்லத்தில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் கென்சிங்டன், சச்சின் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல,இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”சர் டொனால்ட் பிராட்மேனை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்கிறேன்.மிகச் சிறந்த விளையாட்டை விளையாடி,தூய்மையான உத்வேகத்தின் பாரம்பரியத்தை விட்டுச் சென்றவர்”,என்று பதிவிட்டுள்ளார்.

 

,

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments