முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டை இழந்து 166 ரன்கள்..!

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடங்க வீரர்களாக வில் புகோவ்ஸ்கி, டேவிட் வார்னர் இருவரும் இறங்கினர்.

ஆட்டம் தொடக்கத்திலே 5 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதைத்தொடர்ந்து,  மார்னஸ் லாபுசாக்னே களமிறங்க இருவரும் கூட்டணி அமைத்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்த வில் புகோவ்ஸ்கி அரைசதம் அடித்து 62 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர், ஸ்மித் களம் காண மார்னஸ், ஸ்மித் இருவரும் நிதானமான ஆட்டத்தை விளையாடி ரன்களை எடுத்தனர்.

முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டை இழந்து 55 ஓவர் முடிவில் 166 ரன்கள் எடுத்துள்ளனர். தற்போது களத்தில் மார்னஸ் 67*, ஸ்மித் 31* ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இந்திய அணியில் முகமது சிராஜ், நவ்தீப் சைனி தலா ஒரு விக்கெட்டை பறித்தனர்.