Saturday, July 24, 2021
HomeCricketசொந்த நாட்டிற்கு பாதுகாப்புடன் திரும்பிய ஆஸ்திரேலிய வீரர்கள்..!!

சொந்த நாட்டிற்கு பாதுகாப்புடன் திரும்பிய ஆஸ்திரேலிய வீரர்கள்..!!

ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் வர்ணனையாளர்கள் உட்பட 38 பேர் பத்திரமாக தனது சொந்த நாடு திரும்பியுள்ளனர்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தா அணி சேர்ந்த இரண்டு வீரர்களுக்கும், சென்னை அணியில்  இருவருக்கும் ஹைதராபாத் அணியை சேர்ந்த வீரர் விரித்திமான் சாஹா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீரர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டு வந்ததால் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

 ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் விமானம் மூலம் தனது சொந்த நாட்டிற்க்கு திரும்பி செல்கின்றார்கள். அந்த வகையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் கடந்த 10 நாட்களாக மாலைத்தீவில் தனிமைபடுத்தப்பட்டு சொந்த நாடு திரும்பினார். அதன் படி வார்னர், ஸ்மித், வர்ணனையாளர்கள் உட்பட 38 பேர் பத்திரமாக தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவிற்கு திரும்பியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments