இந்திய அணியின் அதிரடி வீரர் ரோஹித் சர்மா இந்திய அணியுடன் இணைந்துள்ள நிலையில், டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகியதை தொடர்ந்து, கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இரண்டாம் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, இந்திய அணியுடன் ரோஹித் சர்மா இணைந்தார். மேலும், அவர் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. தற்பொழுது பிசிசிஐ, டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கேப்டனாக ரஹானேவும், துணை கேப்டனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி, இந்த தொடரில் கே.எல்.ராகுல், தமிழக வீரர் நடராஜன் இணைந்துள்ளார்.