உணர்ச்சி பொங்க கண்ணீர் வடித்த முகமது சிராஜ்.! இணையத்தில் பலரும் ஆதரவு.!

இந்திய நாட்டு தேசிய கீதம் ஒலிக்கும்போது, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் உணர்ச்சி பொங்க கண்ணீர் விட்டார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. அதில், முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வென்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டி… Continue reading உணர்ச்சி பொங்க கண்ணீர் வடித்த முகமது சிராஜ்.! இணையத்தில் பலரும் ஆதரவு.!

ஐசிசி தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து முதலிடம் பிடித்து சாதனை.!

நியூசிலாந்து அணி ஐசிசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 118 ரேட்டிங் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. பே ஓவலில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. கேப்டன் கேன் வில்லியம்சன், ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். இந்த வெற்றியால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 117 மதிப்பீடுகளுடன் நியூசிலாந்து முதலிடத்துக்கு… Continue reading ஐசிசி தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து முதலிடம் பிடித்து சாதனை.!

தாதா கங்குலி ஜன.6 ஆம் தேதி டிஸ்சார்ஜ் – மருத்துவமனை

பிசிசிஐ தலைவரும், இந்தியாவின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி ஜன.6 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  கடந்த ஜனவரி 2-ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கங்குலி இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளது என்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கங்குலி விரைவில் மீண்டு வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், லேசான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட… Continue reading தாதா கங்குலி ஜன.6 ஆம் தேதி டிஸ்சார்ஜ் – மருத்துவமனை

#BREAKING: விதிகளை மீறியதால் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்துதல்.!

ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறிய ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக புகாரை தொடர்ந்து பிசிசிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், பந்த், பிரிதிவி ஷா, நவ்தீப் சைனி ஆகியோர் கொரோனா விதிமுறைகளை மீறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மீறி ஆஸ்திரேலியாவில் வெளியே சுற்றிய 5 இந்திய வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம்… Continue reading #BREAKING: விதிகளை மீறியதால் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்துதல்.!

கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்.!

சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. BCCI தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் என பலரும் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.… Continue reading கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம்.!

#BREAKING: சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி.!

BCCI தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ-ன் தற்போதைய தலைவருமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். நெஞ்சுவலி காரணமாக சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.