#INDvENG : இங்கிலாந்து அணி வெற்றி வாகை சூடியது.!

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 5-ஆம் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 218, சிபிலி 87, பென் ஸ்டோக்ஸ் 82 ரன்கள் எடுத்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் பும்ரா, அஸ்வின் தலா 3 விக்கெட்டும், ஷாபாஸ் நதீம், இஷாந்த் சர்மா தலா… Continue reading #INDvENG : இங்கிலாந்து அணி வெற்றி வாகை சூடியது.!

#IPLT20:மீண்டும் ஐபிஎலில் நுளைகிறது விவோ நிறுவனம் முக்கிய தகவல்

2022-ஆம் ஆண்டு வரை விவோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் இருந்த நிலையில், சீன விவகாரத்தால் கடந்த சீசன் ஸ்பான்சர்ஷிப் மட்டும் ட்ரீம் 11 நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டு நடைபெற இருக்கும் 2021-ஐபிஎல் தொடருக்கு மீண்டும் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் விவோ நிறுவனத்திற்கு வழங்க உள்ளதாக பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, இதுவரை 13 சீசன்கள் ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், 14வது சீசனுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்தியாவில் நடைபெற வேண்டிய 13-வது ஐபிஎல் தொடர்,… Continue reading #IPLT20:மீண்டும் ஐபிஎலில் நுளைகிறது விவோ நிறுவனம் முக்கிய தகவல்

மரிய ஷரபோவா நிச்சயதார்த்த மோதிரம் இவ்வளவு கோடியா ..?

டென்னிஸ் உலகில் நம்பர் 1 வீராங்கனையாகத் திகழ்ந்த முன்னாள் ரஷ்ய டென்னிஸ் வீரங்கனை மரிய ஷரபோவா தனது நிச்சயதார்த்த மோதிரத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவரது காதலர் அலெக்சாண்டர் கில்கெஸ் ஆவார். இவர்களின் நிச்சயதார்த்த மோதிரம் ஐந்து காரட் துண்டு வெள்ளை தங்கம் மற்றும் நீலநிற வெள்ளி நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மையத்தில் ஒரு வைரத்துடன் ஒரு மரகத பொறிக்கப்பட்டுள்ளது. மோதிரத்தின் விலை ரூ.400,000 டாலர் (இந்திய மதிப்பில் 2,92,56,820 கோடியாகும்) இந்நிலையில், இந்த அதிகம் விலைஉயந்த நிச்சயதார்த்த மோதிரத்தை… Continue reading மரிய ஷரபோவா நிச்சயதார்த்த மோதிரம் இவ்வளவு கோடியா ..?

கங்குலி திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று ஸ்டெண்டிங் செய்யப்படுகிறது -மருத்துவமனை நிர்வாகம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2-ஆம் தேதி சவுரவ் கங்குலி திடீர் நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து கங்குலி வீடு திரும்பிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இன்று வியாழக்கிழமை ஸ்டெண்டிங் … Continue reading கங்குலி திடீர் நெஞ்சுவலி காரணமாக இன்று ஸ்டெண்டிங் செய்யப்படுகிறது -மருத்துவமனை நிர்வாகம்

#IPL T20:ஐபிஎல் ஏலத்துக்கான தேதி அறிவிப்பு சென்னனயில் வைத்து நடைபெறுகிறது

14-ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ஆம் தேதி சென்னையில்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டிற்கான 14-ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டதை,இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் தொடர்ந்து அந்தந்த அணியினர் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம்… Continue reading #IPL T20:ஐபிஎல் ஏலத்துக்கான தேதி அறிவிப்பு சென்னனயில் வைத்து நடைபெறுகிறது

சூதாட்டத்தில் ஈடுபட முயன்றதாக இரு வீரர்களை இடைநீக்கம் செய்து ஐ.சி.சி. உத்தரவு

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முன்னாள் கேப்டன் நவீத் மற்றும் உயர்மட்ட பேட்ஸ்மேன் ஷைமான் ஆகியோர் டி 20 உலகக் கோப்பை போட்டிகளில்  முறைகேடு செய்ய முயன்றுள்ளனர் என நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) வீரர்கள் முகமது நவீத் மற்றும் ஷைமான் அன்வர் பட் ஆகியோர் 2019 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் போட்டிகளில் முறைகேடு செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது.அது தற்பொழுது நிருபிக்கப்பட்டதால் அவர்களை ஐ.சி.சி. இடைநீக்கம்… Continue reading சூதாட்டத்தில் ஈடுபட முயன்றதாக இரு வீரர்களை இடைநீக்கம் செய்து ஐ.சி.சி. உத்தரவு

மேக்ஸ்வெல்லை ரூ.10 கோடிக்கு வாங்குவார்கள் ட்விஸ்ட் பதில் கூறிய அஜித் அகர்கர்.

ஐபிஎல்2021: வரவிற்கும்  ஐபிஎல் 2021 ஏலத்தில் க்ளென் மேக்ஸ்வெல் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போவார் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் கூறியுள்ளார். 2019 ஐபிஎல் ஏலத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாபினால் க்ளென் மேக்ஸ்வெல் ரூ.10.75 கோடிக்கு வாங்கப்பட்டார், ஆனால் ஆஸி ஆல்ரவுண்டர் நம்பிக்கையை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டார், 13 போட்டிகளில் வெறும் 108 ரன்களை 15.42 சராசரியாக பெற்றிருந்தார்.எதிர்ப்பார்த்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்ததால் கடந்த வாரம்  விடுவிக்கப்பட்ட ஒன்பது வீரர்களில்… Continue reading மேக்ஸ்வெல்லை ரூ.10 கோடிக்கு வாங்குவார்கள் ட்விஸ்ட் பதில் கூறிய அஜித் அகர்கர்.

புஜாரா இப்படி செய்தால் நான் என் ஒருபக்க மீசையை எடுத்துக்கொள்ள தயார் – அஸ்வின்..!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சீன பெருஞ்சுவரை போல் உருவெடுத்து கை, கால், ஹெல்மெட், என  அடிவாங்கி சற்றும் சளைக்கமால் நின்று இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்குவகித்தார் புஜாரா.இந்திய அணியும் வரலாற்று சாதனை படைத்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்திய மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வருகின்ற பிப்ரவரி 5 சென்னையில் தொடங்குகிறது.இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரிடம் தனது யூடுப் சேனலுக்காக பேட்டி ஒன்றை எடுத்துள்ளார்.… Continue reading புஜாரா இப்படி செய்தால் நான் என் ஒருபக்க மீசையை எடுத்துக்கொள்ள தயார் – அஸ்வின்..!

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்ல வேண்டும் – மகிளா ஜெயவர்தனே

இலங்கை முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தன இங்கிலாந்து அணியை பற்றி கூறுகையில் இந்தியாவில் விளையாட இங்கிலாந்து ‘நன்கு தயாராக’ உள்ளது என்று கூறியுள்ளார். இலங்கையின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனே இலங்கை சுற்றுப்பயணத்தின் போது இங்கிலாந்து அணியின் செயல்திறனை வெகுவாக  பாராட்டினார், அதன்படியே இங்கிலாந்து அணியும் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கையை வாஷ்அவுட் செய்து  வென்றது,மேலும் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியை பற்றி கூறுகையில்,இந்தியாவில் விளையாட இங்கிலாந்து ‘நன்கு தயாராக’ உள்ளது.அவர்களின் தற்போதைய… Continue reading இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்ல வேண்டும் – மகிளா ஜெயவர்தனே

சென்னை வந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்

இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சென்னையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார். முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 05 ஆம் தேதி சென்னையில்  தொடங்குகிறது  மற்றும் அணியின் பயிற்சி பிப்ரவரி 2 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் பங்கேற்காத வீரர்களுடன் பென் ஸ்டோக்ஸ் சென்னை வந்துள்ளார்.இவர்கள் ஐந்து நாள் தனிமையில் இருப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தனது அறையின்… Continue reading சென்னை வந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்