சிகிச்சை முடிந்தது ! மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த கங்குலி

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிசிசிஐ தலைவர் கங்குலி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் கடந்த 2-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள், உட்பட பலரும் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர். இதன் பின் நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் …

முதல் நாள் ரசிகரின் தலையில் போட்ட ஆட்டோகிராப் ! 3-வது நாளும் ஆட்டோகிராப்புடன் வந்த ரசிகர்

வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன் போட்டியின் போது ரசிகர் ஒருவரின் தலையில் போட்டுள்ள ஆட்டோகிராப் வீடியோ வைரலாகி வருகின்றது.  நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. தொடரின் இரண்டாவது போட்டி கிறிஸ்ட்சர்ச்சின் ஹெகல் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கையில் ஜேமிசன் பாகிஸ்தானின் முதல் இன்னிங்சின் போது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டியின் போது, ​​ஒரு ரசிகர் ஜேமிசனிடம் ஆட்டோகிராஃப் கேட்ட நிலையில், …

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இருந்து ராகுல் விலகல்

வலைப்பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி விலகியதை தொடர்ந்து, கேப்டனாக ரஹானே …

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலி ! வெளியான கொரோனா பரிசோதனை முடிவு

சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மருத்துமனையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு  மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ  தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் என பலரும் …