Monday, September 20, 2021
HomeCricketசூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா இங்கிலாந்துக்கு செல்ல ஒப்புதல் அளித்த ஜெய் ஷா..!

சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா இங்கிலாந்துக்கு செல்ல ஒப்புதல் அளித்த ஜெய் ஷா..!

சூர்யகுமார் யாதவ் மற்றும் பிருத்வி ஷாவுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா இங்கிலாந்துக்கு செல்ல ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆகஸ்ட் 4 -ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கும் டெஸ்ட் தொடரில் இருந்து சுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாக  அணியில் இருந்து விலகிய நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இரண்டு புதிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இவர்கள் இலங்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தபோது இந்திய அணியில் மூன்று வீரர்கள் க்ருனால் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இரு வீரர்களும் கொழும்பிலிருந்து இங்கிலாந்துக்கு எப்போது புறப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா இருவரும் கொரோனா உறுதி செய்யப்பட்ட  க்ருனால் பாண்டியா உடன் நெருங்கிய தொடர்புகளில் இருந்தவர்கள். இவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தனிமைபடுத்தி கொண்டு இருந்தனர்.  

ஆனால், பரிசோதனை செய்தபோது கொரோனா நெகடிவ் என அறிக்கைகள் வந்த நிலையில், குழு நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று இங்கிலாந்துக்கு சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா அனுப்ப பிசிசிஐ செயலாளர் அனுமதி வழங்கினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments