சென்னை வந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்

இந்தியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சென்னையில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 05 ஆம் தேதி சென்னையில்  தொடங்குகிறது  மற்றும் அணியின் பயிற்சி பிப்ரவரி 2 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் பங்கேற்காத வீரர்களுடன் பென் ஸ்டோக்ஸ் சென்னை வந்துள்ளார்.இவர்கள் ஐந்து நாள் தனிமையில் இருப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தனது அறையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

நாள் 1 தனிமைப்படுத்தல், நான் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தலைச் செய்துள்ளேன், ஒவ்வொரு நாளும் என் படுக்கையை உருவாக்க முயற்சிக்க வேண்டும், அது சிறந்த வேலை அல்ல, ஆனால் அதைச் செய்ய வேண்டும்.ஆகவே அடுத்த ஐந்து நாட்களுக்கு இதுதான் என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது இலங்கையில் உள்ள மீதமுள்ள இங்கிலாந்து வீரர்கள் புதன்கிழமை சென்னை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மனதில் வைத்து கூடுதல் முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *