தடகள ஆணையத் தேர்தலில் போட்டியிடுகிறார் பிவி சிந்து..!

ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை பதக்கம் வென்றவர் பி.வி.சிந்து நடந்து முடிந்த 2021 ஒலிம்பிக் மகளிர் பேட்மிட்டன் போட்டியில் வெண்கலப் பாதகமா வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 17-ம் தேதி ஸ்பெயினில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது நடைபெறும் BWF தடகள ஆணையத் தேர்தலில் பி.வி.சிந்து போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. சிந்து ஆறு பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஒன்பது வேட்பாளர்களில் ஓருருவராவார். சிந்து இதற்கு முன்பு ஒருமுறை 2017 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாமஸ் மற்றும் உபேர் கோப்பை: ஸ்பெயினை வீழ்த்திய இந்தியா..!

தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.  தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கில் நேற்று முன்தினம் தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பெண்களுக்கான இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பான், இந்தியா உள்பட 16 அணிகள் கலந்துகொள்கிறது. இதில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. டென்மார்க்கில் நடைபெற்ற தாமஸ் உபெர் கோப்பையில் இந்தியாவும் ஸ்பெயினும் நேற்று மோதின. …

TokyoParalympics2021 : பேட்மிட்டன் அரையிறுதி போட்டிகளில் இந்திய வீரர்கள்.! 

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் 2 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட 12 பாதகங்களை பெற்று 36வது இடத்தில் உள்ளது. இன்றைய நிலவரப்படி, இந்திய பேட்மிட்டன் வீரர் பிரமோத் பகத் பேட்மிட்டன் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார். அதே போல இரட்டையர் பிரிவிலும் இந்தியா சார்பாக பிரமோத் பகத் மற்றும் பலாக் கோலி ஆகிய வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர். மேலும் இந்தியா சார்பாக …

பிரதமர் மோடியின் வீட்டில் இந்தியாவின் டோக்கியோ ஒலிம்பிக் குழுவிற்கு பாராட்டுவிழா..!

டோக்கியோ ஒலிம்பிக் குழுவை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் சந்தித்தார். இந்தியாவின் டோக்கியோ ஒலிம்பிக் குழுவை பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இல்லத்தில் நடத்தினார். டோக்கியோ விளையாட்டில் இந்தியா ஏழு பதக்கங்களை வென்றுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது இது இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் மிகச்சிறந்த பதக்கமாகும். முன்னதாக, நாட்டின் 75 வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இந்திய ராணுவ படையினரைப் பாராட்டி அவர்களுக்கு வணக்கம் தெரிவித்திருந்தார். இனிலையில் இன்று நடத்த விழாவில் டோக்கியோ …

பிரதமர் மோடி பிவி சிந்துவுடன் ஐஸ் கிரீம் பகிர்ந்து தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்..!

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது இரண்டாவது ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை பிவி சிந்துவுடன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றினார். ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் 2020 க்கு சென்ற இந்தியாவின் முழுப் பிரிவையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். டோக்கியோவுக்கு வீரர் வீராங்கனைகள் புறப்படுவதற்கு முன்பு, இந்திய விளையாட்டு வீரர்களுடன் மோடி உரையாடினார் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் …

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கங்களை வென்றவர்கள் பட்டியல்..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா மொத்தம் ஏழு பதக்கங்களை வென்றுள்ளது, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்தியாவிற்காக தனித்து தங்கப் பதக்கத்தை வென்றார். பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு மற்றும் மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர். ஷட்லர் பிவி சிந்து, குத்துச்சண்டை வீரர் லோவ்லினா போர்கோஹெய்ன் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றனர். மன்பிரீத் சிங் தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி …

நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு..!

டோக்கியோ ஒலிம்பிக்ல் வெண்கல பதக்கம் வென்ற பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து நாடு திரும்பினார். டோக்கியோவில் இருந்து டெல்லி வந்த சிந்துவுக்கு விமான நிலையத்தின் வெளியே ரசிகர்கள் உற்சாக வரவேற்பு. நான் வெண்கலப் பதக்கம் வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், மிகவும் பெருமைப்படுகிறேன். ஒலிம்பிக்கில் மீண்டும் மீண்டும் பதக்கங்களை வெல்வது எளிதல்ல. இது 2016 இல் மிகவும் வித்தியாசமானது மற்றும் ரியோவில் மிகவும் வித்தியாசமாக இருந்தது என பி.வி.சிந்து கூறினார்.

பி.வி.சிந்துவின் உண்மையான பாசத்தில் அழுது விட்டேன்..!

பி.வி.சிந்துவின் உண்மையான பாசத்தில் அழுது விட்டேன்: வெள்ளி வென்ற தைவான் வீராங்கனை உருக்கம். பாட்மிண்டன் பிரிவில் தைவான் வீராங்கனை டை சூ இங் வெள்ளிப்பதக்கம் வென்றார். இறுதிப் போட்டிக்குப் பின் தன்னை இந்திய வீராங்கனை சிந்து ஊக்குவித்து தேற்றினார் இது என்னை அழ வைத்து விட்டது என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சீனாவின் சென் யூஃபீ இறுதியில் வென்று தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இத்தனைக்கும் தய்வான் வீராங்கனை டை சூ இங்தான் உலக சாம்பியன் ஆவார். ஆனால் சீன …

பி.வி.சிந்துவுக்கு நாடாளுமன்றத்தில் புகழாரம்..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த சிந்துவுக்கு நாடாளுமன்றத்தில் புகழாரம். கடும் உழைப்பு மூலம் சாதனை புரிந்துள்ளார் இந்தியாவின் பி.வி.சிந்து என மாநிலங்களவை தலைவர் வெங்கையா பேச்சு.

டோக்கியோ ஒலிம்பிக்: பி.வி சிந்துவை வீழ்த்திய தாய் சூ-யிங் தங்கத்தை தவறவிட்டார்..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில்,பிவி சிந்து உலகின் நம்பர் 1 வீராங்கனையான சீன தைபேயின் தாய் சூ-யிங்கை எதிர்கொண்டார். இப்போட்டியில்,18-21, 12-21 என்ற கணக்கில் தாய் சூ-யிங் வென்றார். இந்நிலையில்,  இறுதிப்போட்டியில்  சீனாவின் சென் யுபெய் , சீன தைபேயின் தாய்-சூ-யிங் மோதினர். இறுதியாக பேட்மிண்டன் மகளிர் பிரிவில் சீனாவின் சென் யுபெய் தங்கம் வென்றார்.  இறுதிப்போட்டியில் தாய்-சூ-யிங்கை  21-18, 19-21, 21-18 என்ற கணக்கில் சென் யுபெய் வீழ்த்தினார்.