Monday, October 25, 2021
HomeCricketநீண்ட நாட்களுக்கு பிறகு விருந்து வைக்க காத்திருக்கும் ஐபிஎல் சென்னை vs மும்பை மோதல்

நீண்ட நாட்களுக்கு பிறகு விருந்து வைக்க காத்திருக்கும் ஐபிஎல் சென்னை vs மும்பை மோதல்

இந்தியாவில் கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலையால் நடந்துகொண்டிருந்த ஐபிஎல் 14 வது சீசன் 2021 நிறுத்தப்பட்டது.நீண்ட இடைவேளிக்கு பிறகு  நான்கு மாதங்களுக்குப் பின்னர் இன்று தொடங்குகிறது.இந்த சீசனில் மீதமுள்ள 31 போட்டிகள் யுஏஇ-யில் நடைபெறுகிறது.

இந்தியாவில் நடந்துகொண்டிருந்த பொழுது கொரோனா பரவலுக்கு ஐபில் போட்டி முக்கிய காரணியாக உள்ளது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து போட்டி நிறுத்தப்பட்டது.

இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் சென்னை வீரர்கள் ஃபாஃப் டு ப்ளெஸி, சாம் கரண் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் எனக் கூறப்படுகிறது.

சென்னை அணி , மும்பை அணியுடன் கடைசி போட்டியில் மோதியது. அப்போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, மீண்டும் இரு அணிகளும் மோதவுள்ளதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில்  எழுந்துள்ளது.

டெல்லி 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் தலா 10 புள்ளிகள் பெற்று 2, 3-வது இடங்களில் உள்ளன.மும்பை 8 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments