Tuesday, September 21, 2021
HomeCricketதிடீரென மயங்கி விழுந்து உயிருக்கு போராடும் கிறிஸ் கெய்ர்ன்ஸ்..!

திடீரென மயங்கி விழுந்து உயிருக்கு போராடும் கிறிஸ் கெய்ர்ன்ஸ்..!

கிறிஸ் கெய்ர்ன்ஸ் ஒரு சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்தார், குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில் அவர் தனிச்சிறப்பான வீரராக இருக்கும் கிறிஸ் கெய்ர்ன்ஸ் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

1989 முதல் 2006 வரையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓய்வு பெற்றவர் நியூசிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் கெய்ர்ன்ஸ். இவருக்கு வயது 51 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ் கெய்ர்ன்ஸுக்கு சமீபத்தில் இதயத்தில் கோளாறு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதயத்தில் கோளாறு ஏற்பட்டு அதற்காக சில ஆபரேஷன்களும் அவர் செய்து கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் கேன்பராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் அவர் உயிருக்கு போராடி வருவதாகவும், ஆனால் சிகிச்சைக்கு அவரின் உடல் ஒத்துழைக்கவில்லை எனவும் நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments