வாழ்த்துகள் நட்டு ! வாழ்த்துக்கள் என்று நடராஜனை தமிழில் புகழ்ந்து பேசிய டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்  மேற்கொண்ட இந்திய அணியில் முக்கிய நபராக பார்க்கப்பட்டவர் தமிழகத்தை சேர்ந்த தங்கராசு நடராஜன்.ஆஸ்திரேலியா செல்ல முதலில் அவர் வலைப் பந்து வீச்சாளராக தேர்வானார்.ஆனால் ,அவருக்கு டி20, ஒரு நாள், டெஸ்ட் எல்லா ரக போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.இப்படி தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் அனைத்து ரக போட்டிகளிலும் பங்கேற்ற முதல் வீரரானார் தங்கராசு நடராஜன்.

அவ்வாறு தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டார் நடராஜன்.இவரின் யாக்கரால் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர்,குறிப்பாக டி20 இல் இவர் ஆறு விக்கெட்களை வீழ்த்தி இதுதான் ! தான்  என்று சொல்லாமல் நிருபித்துக்காட்டினார்.

இந்த நிலையில், நடராஜன் குறித்து சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி  ஒன்றில் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னர், “வாழ்த்துகள் நட்டு” நீங்கள் மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒரு அருமையான மனிதர். எங்கள் அணியில் நீங்கள் இருப்பதை அனைவரும் விரும்புகிறோம். “வாழ்த்துகள் நட்டு”என தமிழிலேயே வாழ்த்து தெரிவித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *