இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார் என கூறப்படுகிறது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதனால் கடந்த 3 ஆம் தேதி இங்கிலாந்து அணி வீரர்கள், இலங்கை சென்ற நிலையில், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் மொயின் அலிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. அவருடன் தொடர்பில் இருந்த கிறிஸ் வோக்ஸும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், வரும் 14 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் மொயின் அலி, முதல் டெஸ்ட் தொடரில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.