Tuesday, September 21, 2021
HomeCricketக்ருனால் பாண்டியாவை தொடர்ந்து சாஹல், கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோருக்கு கொரோனா..!

க்ருனால் பாண்டியாவை தொடர்ந்து சாஹல், கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோருக்கு கொரோனா..!

இந்திய அணி ஸ்பின்னர்கள் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, ஆல்-ரவுண்டர் க்ருனால் பாண்டியாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், அவருடன் தொடர்பில் இருந்த  பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், மணீஷ் பாண்டே, இஷான் கிஷன் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் உள்ளிட்ட வீரர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டனர்.

பிறகு கடைசி இரண்டு டி20 போட்டிகளில் இவர்கள் பங்கேற்கவில்லை. இதனால், இந்தியா, இலங்கைக்கு எதிரான கடைசி இரண்டு டி20  போட்டிகளில் பல முக்கிய வீரர்கள் இல்லாமல் விளையாடியது. இந்நிலையில், இந்திய அணி ஸ்பின்னர்கள் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டி 20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில்  இலங்கை அணி இந்தியாவை தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம், இலங்கை தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments