Monday, June 14, 2021
HomeCricketஇலங்கையை வைட்வாஸ் செய்து கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து 2-0

இலங்கையை வைட்வாஸ் செய்து கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து 2-0

இலங்கை சுற்றுப்பயணம்  மேற்கொண்ட இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க சென்றது.ஏற்கனவே நடந்து முடிந்த  முதல் டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிப்பெற்றது .இந்நிலையில் இரண்டாவது டெஸ்டிலும் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் இலங்கையை வைட்வாஸ் செய்து கோப்பையை கைப்பற்றியுள்ளது.

நான்காவது நாளில், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களான ஜாக் லீச் மற்றும் டொமினிக் பெஸ் ஆகியோர் இலங்கையின் பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட செய்தனர்.இதனால் 126 ரன்களுக்கு இலங்கை அணி  அனைத்து விக்கெட்களையும் இழந்தது .164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றள்ளது.

சிபிலி ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், ஜோஸ் பட்லர் 48 பந்துகளுக்கு  46 ரன்களுடன் களத்தில் இருந்தனர் .சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார் .

அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி டெஸ்ட் ,டி 20,ஒருநாள் போட்டி என அனைத்திலும் விளையாட உள்ளது.முதல் டெஸ்ட்டானது வருகிற பிப்ரவரி 05-09 வரை சென்னையில்  நடக்க இருக்கிறது.இதற்கான இரு அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

இந்தியாவிற்கு எதிரான இங்கிலாந்து அணி பிரயோஜனம் இல்லாத ஒன்று – கெவின் பீட்டர்சன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments