Monday, September 20, 2021
HomeCricketசிராஜின் மேல் பந்தை எறிந்த இங்கிலாந்து ரசிகர்கள் ;வாயடைக்க பதிலளித்த சிராஜ் வேற லெவல்

சிராஜின் மேல் பந்தை எறிந்த இங்கிலாந்து ரசிகர்கள் ;வாயடைக்க பதிலளித்த சிராஜ் வேற லெவல்

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்று களமிறங்கிய இந்திய அணி 40.4 ஓவரில் 78 ரன்னிற்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தற்போதுவரை இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி வருகிறது.

இதனிடையே, இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் பவுண்டரி லைனில் நிற்கும்போது இங்கிலாந்து ரசிகர்கள் அவர் மீது பந்து ஒன்றை வீசியுள்ளனர்.அது எந்த வகையான பந்து அல்லது சிராஜை தாக்க வேண்டுமென்றே எரிந்தார்களா என்பது பற்றி  தெளிவாக இல்லை. இருப்பினும், இது குறித்து இந்தியா எந்த அதிகாரப்பூர்வ புகாரையும் இதுவரை அளிக்கவில்லை.

இந்த செயலுக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து ரசிகர்களை பார்த்து வேகமாக நகர்ந்து சென்ற சிராஜ்  நாங்கள் இந்த தொடரில் 1 என்று முன்னிலை பெற்றுள்ளோம் நீங்கள் 0 என்று சைகை காட்டி வாயடைக்க செய்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments