Monday, September 20, 2021
HomeCricketEngland vs India: இரண்டாவது டெஸ்ட் 3-வது நாள் ஆட்டம்..!

England vs India: இரண்டாவது டெஸ்ட் 3-வது நாள் ஆட்டம்..!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இரு நாள்கள் முன்பு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் எடுத்தனர். களத்தில் கே.எல் ராகுல் 127*,  ரஹானே 1* ரன்களுடன் இருந்தனர்.

2-ஆம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழந்து 119 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 2-ஆம் நாள் ஆட்ட பாதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 126.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 364 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், ராபின்சன், மார்க் வூட் தலா 2 விக்கெட்டுகளையும், மெயின் அலி ஒரு விக்கெட்டையும் பறித்தனர்.

இன்று மூன்றவது நாள் போட்டி நடந்து வருகிறது இதில் இங்கிலத்து அணியினர் 69 ஓவர்க்கு 195 ரன்கள் எடுத்து 3 விக்கெட் இழப்பில் உளளனர். இந்த ஆட்டத்தில் தற்போது ஜோ ரூட் மற்றும் ஜானி பெயர்ஸ்டோபெட்டிங் செய்து வருகின்றனர். இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் பந்துவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

ஜோ ரூட் 158 பந்துகளுக்கு 82 ரன்கள் அடித்துள்ளார். மேலும் ரூட் பெட்டிங் ஜானி பெயர்ஸ்டோ 88 பந்துகளுக்கு 48 அடித்து விளையாடி வருகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments