Monday, September 20, 2021
HomeCricketEng vs Ind,3rd Test:இங்கிலாந்தின் நிதான ஆட்டம் திணறும் இந்தியா 63 ரன்கள் முன்னிலை

Eng vs Ind,3rd Test:இங்கிலாந்தின் நிதான ஆட்டம் திணறும் இந்தியா 63 ரன்கள் முன்னிலை

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி 40.4 ஓவரில் 78 றண்ணிற்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன் தலா 3, ராபின்சன், சாம்கரண் தலா 2 விக்கெட்டை எடுத்தனர்.இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் 19 மற்றும்  ரஹானே 18 ரன்கள் எடுக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கி தொடக்கமுதலே இருவரும் சிறப்பாக விளையாடி வந்தனர். ரோரி பர்ன்ஸ் 61 ரன்னிற்கு சமியிடம் ஆட்டமிழக்க தற்போதுவரை இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 63ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

களத்தில்*, ஹசீப் ஹமீது 68*  டேவிட் மாலன் 4* ரன்களுடன் உள்ளனர்.

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments