இந்தியாவின் சமூக ஊடகங்களில் அமெரிக்காவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா பற்றி விவாதிக்கப்படுகிறது. அக்டோபர் 10-ம் தேதி மார்டினா செய்த ட்வீட்டில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதில் அவர் இந்தியாவின் அரசியல் குறித்து கருத்து தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி பேசினார்.

அதில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு சர்வாதிகாரி அல்ல, ஆனால் அவரைப் போன்ற ஒரு ஜனநாயகத் தலைவர் இந்தியா பெற்றதில்லை என்று குறிப்பிட்டார். அனைவரின் ஆலோசனையையும் கேட்டபிறகுதான் பிரதமர் மோடி தனது ஒவ்வொரு முடிவையும் எடுக்கிறார் என்று அமித் ஷா கூறினார்.

இதற்கு புகழ்பெற்ற அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின்பேச்சுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில்  “இது நகைச்சுவையாக உள்ளது” என்று கருத்து தெரிவித்தார். இதையெடுத்து,  இந்தியாவில் சர்ச்சை தொடங்கினாலும், மார்டினாவிற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *