பால்மாஸ் கால்பந்து கிளப்பின் தலைவர் உட்பட நான்கு வீரர்கள் விமான விபத்தில் பலி.
பிரேசிலை சேர்ந்த பால்மாஸ் கால்பந்து கிளப்பின் தலைவரும் அதன் நான்கு வீரர்களும் ஞாயிற்றுக்கிழமை பிரேசிலிய கோப்பை விளையாட ஒரு சிறிய ரக விமானத்தில் பயணம் செய்ய தயாராக இருந்தனர் ,அப்பொழுது எதிர்பாராத விதமாக டேக்-ஆஃப் செய்யும் பொழுது விபத்தில் விமானம் சிக்கியது. இதில் கிளப்பின் தலைவர் லூகாஸ் மீரா, வீரர்களான லூகாஸ் பிராக்செடிஸ், கில்ஹெர்ம் நோயே, ரானுலே மற்றும் மார்கஸ் மோலினாரி விமானி வாக்னர் ஆகியோர் சம்பவ இடத்திலே பலியாகினர்.
பிரேசிலில் மிகவும் பிரபலமான பிரேசிலிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.இந்த நான்கு வீரர்களும் கொரோனா பரிசோதனையில் நேர்மறையான முடிவு வந்ததுள்ளது.பின்பு இவர்களது 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நேற்றுடன் முடிந்த நிலையில் விலா நோவாவுக்கு எதிராக ஒரு ஆட்டத்தை விளையாடுவதற்காக வீரர்கள் பங்கேற்க சென்றபொழுதுதான் இந்த துயர சம்பவம் நடைபெற்றது.