Tuesday, April 20, 2021
HomeCricket"இதயத்திற்கு நலமானது!" கங்குலி நடித்த எண்ணெய் விளம்பரங்கள் நிறுத்தம்!

“இதயத்திற்கு நலமானது!” கங்குலி நடித்த எண்ணெய் விளம்பரங்கள் நிறுத்தம்!

“இதயத்திற்கு நலமானது” என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நடித்த விளம்பரங்கள், நெட்டிசன்கள் செயலால் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, ஜனவரி 2 ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கங்குலி இதயத்தில் இரண்டு அடைப்புகள் உள்ளது என்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.

கங்குலி விரைவில் மீண்டு வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் பதிவிட்டு வருகின்றனர். தற்பொழுது சவுரவ் கங்குலி, நாளை டிஸ்சார்ச் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கங்குலி நடித்துள்ள “பார்டியுன்” எண்ணெய் நிறுவனத்தின் விளம்பரங்கள் அனைத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கங்குலி இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, “இதயத்திற்கு நலமானது” என கூறிய கங்குலிக்கே இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, அவர் நடித்த “பார்டியுன்” எண்ணெய் நிறுவனத்தின் விளம்பரங்கள் அனைத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments