ஐபிஎல்2021: வரவிற்கும் ஐபிஎல் 2021 ஏலத்தில் க்ளென் மேக்ஸ்வெல் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போவார் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
2019 ஐபிஎல் ஏலத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாபினால் க்ளென் மேக்ஸ்வெல் ரூ.10.75 கோடிக்கு வாங்கப்பட்டார், ஆனால் ஆஸி ஆல்ரவுண்டர் நம்பிக்கையை திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டார், 13 போட்டிகளில் வெறும் 108 ரன்களை 15.42 சராசரியாக பெற்றிருந்தார்.எதிர்ப்பார்த்த ஆட்டத்தை அவர் வெளிப்படுத்ததால் கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட ஒன்பது வீரர்களில் இவரும் ஒருவர்.
இதுகுறித்து,முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் கூறுகையில் யாருக்கு தெரியும்,ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் வரவிருக்கும் ஐபிஎல் 2021 ஏலத்தில் 10 கோடிக்கு யாரேனும் வாங்கலாம்.அவர்கள் விட்டுச் சென்ற வேறு சில வெளிநாட்டு பெயர்களைக் கண்டு சற்று ஆச்சரியமாகவுள்ளது , ஜிம்மி நீஷாம் மிகப் பெரிய போட்டியைக் கொண்டிருக்கவில்லை, ”என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேக்ஸ்வெல் கடந்து ஆண்டு நடந்துமுடிந்த 13 வது ஐபிஎலில் ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியவில்லை . இதன் விளைவாக, அடுத்த மாத ஏலத்திற்கு முன்னதாக கிங்ஸ் லெவன் பஞ்சாபினால் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.