சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

BCCI தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி, திடீர் உடல்நல பாதிப்பால் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கங்குலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் என பலரும் கங்குலி விரைவில் குணமடைய வேண்டும் என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. அதாவது, நெஞ்சுவலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கங்குலியின் ரத்த ஓட்டம் சீராக உள்ளதாகவும், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.