Monday, September 20, 2021
HomeBadmintonபி.வி.சிந்துவின் உண்மையான பாசத்தில் அழுது விட்டேன்..!

பி.வி.சிந்துவின் உண்மையான பாசத்தில் அழுது விட்டேன்..!

பி.வி.சிந்துவின் உண்மையான பாசத்தில் அழுது விட்டேன்: வெள்ளி வென்ற தைவான் வீராங்கனை உருக்கம்.

பாட்மிண்டன் பிரிவில் தைவான் வீராங்கனை டை சூ இங் வெள்ளிப்பதக்கம் வென்றார். இறுதிப் போட்டிக்குப் பின் தன்னை இந்திய வீராங்கனை சிந்து ஊக்குவித்து தேற்றினார் இது என்னை அழ வைத்து விட்டது என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சீனாவின் சென் யூஃபீ இறுதியில் வென்று தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

இத்தனைக்கும் தய்வான் வீராங்கனை டை சூ இங்தான் உலக சாம்பியன் ஆவார். ஆனால் சீன வீராங்கனை சென் யூஃபீ இவரை 21-18, 19-21, 21-18 என்று வீழ்த்தி தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர், ஸ்மாஷ்கள், வாலிகள் அருமையான சர்வங்கள் என்று கடும் போட்டி நிலவியது. சவால் நிறைந்த நீண்ட ராலிகள் என்று ஆட்டம் உயர் தர பாட்மிண்டனாக கண்ணுக்கு விருந்தாக அமைந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments