Tuesday, September 21, 2021
HomeCricketIND VS ENG: முதல் இன்னிங்சில் 364 ரன்கள் அடித்த இந்திய அணி..!

IND VS ENG: முதல் இன்னிங்சில் 364 ரன்கள் அடித்த இந்திய அணி..!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் எடுத்தனர். களத்தில் கே.எல் ராகுல் 127*,  ரஹானே 1* ரன்களுடன் இருந்தனர்.

இன்று இரண்டவது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதில் அதிகபட்சமாக  கே.எல் ராகுல் 129 ரன்களும், ரோஹித் சர்மா 83 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கேட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ரோரி பர்ன்ஸ் மற்றும் டொமினிக் சிப்லி களமிறங்கினர். தற்போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி விளையாடி வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments