Tuesday, September 21, 2021
HomeCricketநாளை தொடங்க உள்ள 4வது டெஸ்டில் முக்கிய மாற்றங்கள்..! யார் யார் அந்த ப்ளெயினிங்-11?

நாளை தொடங்க உள்ள 4வது டெஸ்டில் முக்கிய மாற்றங்கள்..! யார் யார் அந்த ப்ளெயினிங்-11?

இந்திய – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில், 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்து ஒரு போட்டி டிரா ஆனதை அடுத்து, 1-1 என சமபலத்துடன் 4 வது போட்டியை இந்தியா – இங்கிலாந்து அணிகள் சந்திக்க உள்ளன.

கடந்த போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த முறை சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதனால், சில முக்கிய வீரர்களுக்கு இடம் கிடைக்கும் எனவும், சில வீரர்கள் வெளியே உட்காரவைக்க படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் முக்கியமாக ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அஸ்வினுக்குஇடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இஷாந்த் சர்மாவுக்கு பதில் ஷர்த்துல் தாகூர் இடம் பெறுவார் என கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் நடைபெறுமா? அல்லது 3வது போட்டியை எதிர்கொண்ட வீரர்களை வைத்தே கேப்டன் கோலி இங்கிலாந்திற்கு பதிலடி கொடுக்க இருக்கிறாரா என நாளை வரை பொறுத்திருந்து பாப்போம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments