Tuesday, September 21, 2021
HomeCricketIND vs ENG : ஷர்துல் தாகூரின் அதிரடியில் 191 ரன்களை குவித்தது இந்தியா.!...

IND vs ENG : ஷர்துல் தாகூரின் அதிரடியில் 191 ரன்களை குவித்தது இந்தியா.! முதல் நாள் முடிவில்…

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொன்டு இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகள் நிறைவடைந்து 1-1 என்கிற சமநிலையுடன் இரு அணிகளும் பெ வது போட்டியை எதிர்கொள்கின்றன.

இதில் முதல் நாள் ஆட்ட முடிவில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் மற்றும் கே.எல்.ராகுலும் 11 மற்றும் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு களமிறங்கிய புஜாரா 4 ரன்னில் அவுட் ஆக கேப்டன் கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்து பெவிலியன் திரும்பினர். அதன் பிறகு ஜடேஜா, ரஹானே, பன்ட் ஆகியோர் 10, 14, 9 என பெரிய சொற்ப ரன்களை எடுத்து அவுட் ஆகினர். அதன் பின்னர் களமிறங்கிய ஷர்துல் தாகூர் அதிரடியாக டி20 போல விளையாடி வெறும் 36 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸர் விளாசி 57 ரன்கள் குவித்தார். இறுதியில் 61.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை எடுத்து தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது இந்தியா.

அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து அணி 17 ஓவர் முடிவில் 53 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது. மலன் 26 ரன்களுடனும், க்ரேக் ஓவர்டைன் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments