Tuesday, September 21, 2021
HomeCricketIND vs ENG :டாஸ் வென்றது இங்கிலாந்து.! பேட்டிங்கில் தடுமாறுகிறதா இந்தியா?

IND vs ENG :டாஸ் வென்றது இங்கிலாந்து.! பேட்டிங்கில் தடுமாறுகிறதா இந்தியா?

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, நடைபெற்ற 3 போட்டிகளில் முதல் போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வென்றது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்றது.

இதனை அடுத்து நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதனால், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் 11 மற்றும் 17 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். தற்போது, கேப்டன் கோலி 5 ரன்களுடனும், புஜாரா 4 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். தற்போதைக்கு இவர்களை தான் இந்திய அணியும் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments