Monday, October 25, 2021
HomeFootballஇந்திய மகளிர் கால்பந்து அணி பக்ரைனை வீழ்த்தியது..!

இந்திய மகளிர் கால்பந்து அணி பக்ரைனை வீழ்த்தியது..!

இந்திய பெண்கள் கால்பந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் பஹ்ரைனை வீழ்த்தியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கால்பந்து அணி, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுடன் நட்பு அடிப்படையிலான சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்கிறது. கடந்த வாரம் துனிசியா 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இந்நிலையில், நேற்று இந்தியா பஹ்ரைன் உடன் மோதியது. இப்போட்டியில் இந்திய பெண்கள் கால்பந்து அணி 5-0 என்ற கோல் கணக்கில் பஹ்ரைனை வீழ்த்தியது.

பியாரி காக்கா 19 மற்றும் 68 வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்தார். அவர்கள் தவிர, சங்கீதா பாஸ்போர் (13 வது), இந்துமதி (34 வது) மற்றும் மனிஷா (69 வது) நிமிடங்களில் மற்ற கோல்களை அடித்தனர். இதனால் இந்திய மகளிர் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பஹ்ரைனை வீழ்த்தியது. தரவரிசையில் பஹ்ரைன் 85 வது இடத்திலும், இந்திய அணி 57 வது இடத்திலும் உள்ளது.

நாளை மறுநாள் நடைபெறவுள்ள நட்பு ஆட்டத்தில் சீன தைபே அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments