Monday, September 20, 2021
HomeCricketஓவல் மைதானத்தில் கேப்டன் கோலிக்கு காத்திருக்கும் டிவிஸ்ட்.! என்ன செய்ய போகிறாரோ.?

ஓவல் மைதானத்தில் கேப்டன் கோலிக்கு காத்திருக்கும் டிவிஸ்ட்.! என்ன செய்ய போகிறாரோ.?

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒரு போட்டி சமநிலையில் முடிந்துள்ள நிலையில், இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று உள்ளன.

இன்று நான்காவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து, லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது இந்த ஓவல் மைதானத்தில் முதலில் எந்த அணி பேட்டிங் செய்கிறதா அந்த அணிக்கே வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம். ஏனென்றால், முதலில் பேட்டிங் ஆடும் அணிக்கு சாதகமாகவும், முன்றாவது நான்காவது நாளில் பந்துவீச்சிற்கு சாதகமாகவும் மைதானத்தின் தன்மை அமைந்துவிடும்.

இதனால், முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்யும் அணிக்கே போட்டியில் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், கேப்டன் கோலி முதலில் டாஸ் வெல்லவேண்டும், அப்படி வென்றாலும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த விதியை கேப்டன் கோலி மாற்றுஎழுதப்போகிறாரா? அல்லது இதனை பயன்படுத்தி டாஸ் ஜெயித்தால் பேட்டிங் செய்து பழைய வெற்றிப்பாதைக்கு திரும்ப போகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

கூடுதல் தகவல் : லண்டன் ஓவல் மைதானனத்தில் நடைபெற்ற கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில் உள்ள பேட்டிங் சராசரி யை இன்னிங்ஸ் அடிப்படையில் பார்க்கலாம்.
1st இன்னிங்ஸ் – 357 சராசரி ரன்கள் ; 2nd இன்னிங்ஸ் – 276 சராசரி ரன்கள் ; 3rd இன்னிங்ஸ் – 320 சராசரி ரன்கள் ; 4th இன்னிங்ஸ் – 286 ரன்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments