Tuesday, September 21, 2021
HomeCricketINDvsEngLIVE:3 வது டெஸ்ட் போட்டி - சரியும் இந்திய அணியின் விக்கெட்டுகள் ...!

INDvsEngLIVE:3 வது டெஸ்ட் போட்டி – சரியும் இந்திய அணியின் விக்கெட்டுகள் …!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்களை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில்,இன்று 3.30 மணிக்கு தொடங்கியது.மேலும்,டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி,அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்கிய நிலையில் முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார். ஆனால், எதிர்பாராதவிதமாக முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார்.லோகேஷ் ராகுல் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட்டில் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து,அடுத்த வீரராக புஜாரா 2 வது ஓவரில் களமிறங்கி,ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார்.ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சில் புஜாரா கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவரை தொடர்ந்து,களமிறங்கிய கேப்டன் விராட் கோலி 17 பந்துகளுக்கு 7 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில்,ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் கீப்பர் கேட்ச் ஆகி வெளியேறினார்.இதனால்,அடுத்தடுத்த விக்கெட்களை இழந்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருக்கிறது.இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்களை எடுத்துள்ளார்.

இதனையடுத்து,இறங்கிய ரஹானேவும் 54 பந்துகளுக்கு 18 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.தற்போது களத்தில் உள்ள ரோஹித் ஷர்மா 75 பந்துகளுக்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து,உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது.

இந்திய அணி இதுவரை 25.5 ஓவர்களுக்கு நான்கு விக்கெட் இழந்து 56 ரன்கள் எடுத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments