Tuesday, September 21, 2021
HomeBadmintonபி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, குடியரசு தலைவர்..!

பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, குடியரசு தலைவர்..!

டோக்கியோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து பேட்மிண்டனில் வெண்கலம் வென்றார். சீனாவின் ஹி பிங்ஜியாவோவை  21-13, 21-15 என்ற கோல் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தினார். ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றார்.

இந்நிலையில், வெண்கலம் வென்ற பி.வி.சிந்துவிற்கு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிரதமர் மோடி தனது ட்விட்டரில் தன்னுடைய அதீத திறமையினால் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக வெண்கல பதக்கத்தைப் பெற்றுத் தந்ததைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறோம், இதனால் இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளது என பாராட்டியுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments