டிம் பெயினை விடாமல் துரத்தும் இந்திய ரசிகர்கள் ; போதும் பாவும் விட்ருங்க

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று பல அற்புதமான சாதனைகளை படைத்துள்ளது .அதில் முக்கியமாக பார்க்கப்படுவது டெஸ்ட் தொடர் தான் ,ஏனென்றால் அனுபவம் வாய்ந்த பல வீரர்கள் காயம் காரணமாக விளையாடாமல் போக,விராட்கோலி தனக்கு பிறக்க இருக்கும் குழந்தையை காண நாடு திரும்பினார்.இந்திய அணி இந்த டெஸ்ட் தொடரில் 4-0 என்ற கணக்கில் தோல்வியை தளுவும் என ஆஸ்திரேலிய  முன்னாள் வீரர்கள் வழிமேல் விழிவைத்து காத்திருக்கு ,நம்ம இளம்படை ஆஸ்திரேலியாவை ஒரு கைபார்த்து கோப்பையை கைப்பற்றியது .

ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெயின் 3வது  டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினை வம்பிழுத்தார் உங்களை கஃபாவில் காண ஆர்வமுடன் உள்ளோம் என்று கிண்டலாக  கூறினார்.அதற்கு பதிலளித்த அஸ்வின் நீங்கள் இந்தியா வந்தால் உங்கள் கடைசி டெஸ்ட் அதுவாகத்தான் இருக்கும் என்று கூறினார்.டிம் பெயின் இவ்வாறு காரணம் என்னவென்றால் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது இந்த கஃபா மைதானம் தான்.ஆனால் ஆஸ்திரேலியாவின் 32 ஆண்டுகால சாதனைக்கு இந்தியா முற்றுப்புள்ளிவைத்து வரலாற்று சாதனை படைத்தது.மூத்த வீர்ரகள் யாரும் இல்லாத நிலையில் இந்தியாவின் இந்த மகத்தான வெற்றியை உலகமே கொண்டாடியது.

இப்படி வாய் கொடுத்து மாட்டிக்கிட்ட ஆஸ்திரேலியாவின் கேப்டன் டிம் பெயின் க்கு எதிராக இந்திய ரசிகர்கள் அன்றே பல மீம்ஸ்களை தட்டிவிட்டனர்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, ஒரு பிக் பாஷ் லீக் ஆட்டத்தில் ஹோபார்ட் சூறாவளி பேட்ஸ்மேன்களுக்காக டிம் பெயின் பானங்களை எடுத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.இதை கண்ட இந்திய ரசிகர்கள் சும்மா விடுவாங்களா டிம் பெயினை ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர்.

ஒரு ரசிகர் கூறுகையில் ,இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு பெயின் தனது பிபிஎல் தரப்பில் இணைந்துள்ளார். இருப்பினும், விளையாடும் பதினொன்றில் ஆஸ்திரேலியா நட்சத்திரத்திற்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் மற்றொரு பயனரோ அவர் தண்ணீர் பாட்டில்களையும் கீழே போட்டுவிட்டார் என கிண்டலாக ட்வீட் செய்து வருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *