இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, நடைபெற்ற 3 போட்டிகளில் முதல் போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வென்றது. மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்றது.

இதனை அடுத்து நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இதனால், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மாவும், கே.எல்.ராகுலும் 11 மற்றும் 17 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். அதன் பின்னர், களமிறங்கிய புஜாரா 31 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே அணிக்கு எடுத்துக்கொடுத்து அவுட் ஆகிவிட்டார்.

தற்போது களத்தில், கேப்டன் விராட் கோலியும், ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் இருக்கின்றனர். இதில், கோலி 18 ரன்களுடனும், ஜடேஜா 2 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர். சரிவு பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்திய அணியை காப்பாற்றி சரியான பாதைக்கு திருப்புவாரா கேப்டன் கோலி என எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, இந்திய அணி 25 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 54 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி சார்பில் பந்துத்வவெச்சாளர்கள் ஆண்டர்சன், ராபின்சன், கிருஷ் ஒக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *