டென்னிஸ் உலகில் நம்பர் 1 வீராங்கனையாகத் திகழ்ந்த முன்னாள் ரஷ்ய டென்னிஸ் வீரங்கனை மரிய ஷரபோவா தனது நிச்சயதார்த்த மோதிரத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவரது காதலர் அலெக்சாண்டர் கில்கெஸ் ஆவார். இவர்களின் நிச்சயதார்த்த மோதிரம் ஐந்து காரட் துண்டு வெள்ளை தங்கம் மற்றும் நீலநிற வெள்ளி நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மையத்தில் ஒரு வைரத்துடன் ஒரு மரகத பொறிக்கப்பட்டுள்ளது. மோதிரத்தின் விலை ரூ.400,000 டாலர் (இந்திய மதிப்பில் 2,92,56,820 கோடியாகும்) இந்நிலையில், இந்த அதிகம் விலைஉயந்த நிச்சயதார்த்த மோதிரத்தை மரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மரியா ஷரபோவா 2020 பிப்ரவரி 26 அன்று டென்னிஸை விட்டு வெளியேறினார், அவருக்கு வயது 32 தான். அவரது வருங்கால கணவரான அலெக்சாண்டர் கில்கெஸ் ஒரு பணக்கார பிரிட்டிஷ் தொழிலதிபர் ஆவார்.