Tuesday, May 11, 2021
HomeCricketயாருக்கு வெற்றி? கோலாகலமாகத் துவங்கும் ஐபிஎல்! முதல் போட்டியில் மோதப்போகும் மும்பை மற்றும் பெங்களூரு!

யாருக்கு வெற்றி? கோலாகலமாகத் துவங்கும் ஐபிஎல்! முதல் போட்டியில் மோதப்போகும் மும்பை மற்றும் பெங்களூரு!

14ஆவது ஐபிஎல் தொடரில் இன்னும் சில மணி நேரத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க போகிறது. சென்ற வருடம்வ்
பல்வேறு  கட்டுப்பாடுகளுக்கு இடையே ஐக்கிய அரபு அமீரகத்தின் வெறும் மூன்று மைதானங்களில் மட்டுமே வைத்து நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதிக்கலாம் என்று திட்டம் தீட்டப்பட்டு கிட்டத்தட்ட அதில் வெற்றியும் கிட்டியது.

கடைசி கட்டத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமானதால் இந்த வருட ஐபிஎல் தொடர் 6 மைதானங்களில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முதல் போட்டியில் விராட் கோலியின் தலைமை யிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன

 

இந்த முறையும் கோப்பையை கைப்பற்றி விடலாம் என்று மும்பை இந்தியன்ஸ் அணி கங்கணம் கட்டிக்கொண்டு முதல் போட்டியில் களம் இறங்க தயாராகி விட்டது. அதே நேரத்தில் புத்தம் புதிதாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களம் இறக்கி விடப்பட்டிருக்கிறது.

 

நேருக்கு நேர்

போட்டிகள் விளையாடியது 29
மும்பை வென்றது 19
ஆர்.சி.பி வென்றது 10
டிரா 0
முடிவு இல்லை 0

 

 

எப்போதும் முதல் போட்டியில் தோற்றால் தான் தங்களுக்கு ராசி என்று நினைத்துக்கொண்டிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் முதல் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று இந்த முறையாவது கோப்பையை கைப்பற்றி விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மோதுவது படு சுவாரசியமாக இருக்கப்போகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்க இருக்கிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments