Tuesday, September 21, 2021
HomeCricketபாகிஸ்தானின் ரிஸ்வான் உலக சாதனையை முறியடித்தார்..!

பாகிஸ்தானின் ரிஸ்வான் உலக சாதனையை முறியடித்தார்..!

பாகிஸ்தானின் ரிஸ்வான் ஒரு வருடத்தில் அதிக டி 20 ரன்கள் எடுத்த உலக சாதனையை முறியடித்தார்.

வெஸ்ட்இண்டீஸ் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 4 டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ஒரு வருடத்தில்  டி 20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்து உலக சாதனையை முறியடித்துள்ளார்.

இன்றைய போட்டியில்  முகமது ரிஸ்வான் 46 ரன்கள் அடித்தார். இதனால், ரிஸ்வான் இந்த ஆண்டு டி 20 கிரிக்கெட்டில் 752 ரன்களை எட்டினார். கடந்த 2019 ஆம் ஆண்டில் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் 748 ரன்கள் எடுத்ததே டி20 யில் முந்தைய  உலக சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments