Tuesday, September 21, 2021
HomeSportsபாரா டேபிள் டென்னிஸ்:இந்திய வீராங்கனை பவினா படேல் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

பாரா டேபிள் டென்னிஸ்:இந்திய வீராங்கனை பவினா படேல் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

பாரலிம்பிக் தொடரின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் பிரேசிலின் ஜாய்ஸ் டி ஒலிவேராவை 3-0 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்று திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதன்படி,பாரலிம்பிக் தொடரின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இன்று இந்தியாவின் பவினா படேல் பிரேசிலின் ஜாய்ஸ் டி ஒலிவேராவை 3-0 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில்,பாரா டேபிள் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் பவினா படேல் செர்பிய வீராங்கனை போரிஸ்லாவா ரான்கோவிச்சை 3-0(11-5, 11-6, 11-7) என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வகுப்பு 4 டேபிள் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனால்,பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments