Monday, September 20, 2021
HomeUncategorizedவினேஷுடன் பிரதமரின் பேச்சு: தோல்வியால் சோர்வடைய வேண்டாம்..!

வினேஷுடன் பிரதமரின் பேச்சு: தோல்வியால் சோர்வடைய வேண்டாம்..!

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு சென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி அவர்கள் அவரது வீட்டில் பாராட்டு விழா அமைத்தார். காலை உணவு கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியுடன் வினேஷ் போகாட் சிறப்பு உரையாடலில் ஈடுபட்டார். வினேஷ் போகாட் தற்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பால் (WFI) ஒழுக்கமின்மை காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் கால் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த மல்யுத்த வீரர் வினேஷ் போகத்துடன் உரையாடியபோது பிரதமர் மோடி “நீ ஏன் உன் மீது கோபம் கொண்டாய்? நீ நன்றாக விளையாடினாய் உன் முழு குடும்பமும் நாட்டிற்கு நிறைய கொடுத்துள்ளது என்றார். அவர் மேலும் கூறினார் உங்கள் முழு குடும்பத்தையும் எனக்குத் தெரியும். நீங்கள் ஏமாற்றமடைந்ததை என்னால் பார்க்க முடியவில்லை. பின்னர் பிரதமர் மோடி அவரையும் அவரது குடும்பத்தினரையும் தனது இல்லத்திற்கு அழைத்தார்.

இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் மல்யுத்தம் 53 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில்,இந்தியாவின் வினேஷ் போகத் ,ஸ்வீடன் வீராங்கனை சோபியாவை எதிர்கொண்டார்.ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய வினேஷ்,போட்டியின் இறுதியில் 7-1 என்ற கணக்கில் சோபியாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில்,இதனைத் தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி சுற்றில் வினேஷ்,2 முறை உலக சாம்பியனான பெலாரஸின் வனேசா கலாட்ஜின்ஸ்காயாவை எதிர்கொண்டார்.ஆனால்,இப்போட்டியின் இறுதியில்,3-9 என்ற கணக்கில் வினேஷ் போகத்,வனேசாவிடம் தோல்வியுற்றுள்ளார்.இதனால்,அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments