Monday, September 20, 2021
HomeBadmintonபிரதமர் மோடியின் வீட்டில் இந்தியாவின் டோக்கியோ ஒலிம்பிக் குழுவிற்கு பாராட்டுவிழா..!

பிரதமர் மோடியின் வீட்டில் இந்தியாவின் டோக்கியோ ஒலிம்பிக் குழுவிற்கு பாராட்டுவிழா..!

டோக்கியோ ஒலிம்பிக் குழுவை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் சந்தித்தார். இந்தியாவின் டோக்கியோ ஒலிம்பிக் குழுவை பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது இல்லத்தில் நடத்தினார். டோக்கியோ விளையாட்டில் இந்தியா ஏழு பதக்கங்களை வென்றுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது இது இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் மிகச்சிறந்த பதக்கமாகும். முன்னதாக, நாட்டின் 75 வது சுதந்திர தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் இந்திய ராணுவ படையினரைப் பாராட்டி அவர்களுக்கு வணக்கம் தெரிவித்திருந்தார். இனிலையில் இன்று நடத்த விழாவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பெருமைப்படுத்தும் விதமாக அவர் இல்லத்தில் விழா ஒன்றை அவர் தொகுத்து வழங்கினார்.

மற்றும் பி.வ.சிந்துவுடன் ஒலிம்பிக்க்கு பிறகு ஐஸ்கிரீம் சாப்பிடுவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற அவருடன் ஐஸ்கிரீம் பகிர்ந்தார். மேலும் ஈட்டி எரித்தலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுடன் புகைப்படங்களும் அவருக்கு நன்றியையும் தெரிவித்தார். நீரஜ் சோப்ரா ஆடவர் ஈட்டிஎறிதல் பிரிவில் 87.58 மீ ஈட்டி எரிந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மல்யுத்த அணியுடன் பிரதமர் மோடி போஸ் கொடுத்தார். அவரது வலதுபுறத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி தஹியா, இடதுபுறத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. வினேஷ் போகட், தீபக் புனியா, சோனம் மாலிக் ஆகியோர் இருந்தனர்.

மற்றும் இந்திய ஆடவர் ஹாக்கி அணியையும் சந்தித்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments