ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.பிரிஸ்பேன் டெஸ்டின் இறுதி நாளில் அவர் நெருக்கடி நிலைமையைக் கையாண்டு இந்தியாவை வெற்றிப் பாதையில் கொண்டு சென்ற விதம் அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
இதற்கிடையில் ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட அதை யுஸ்வேந்திர சாஹால் தனது வழக்கமான நகைச்சுவையால் திணறடித்துள்ளார் .யுஸ்வேந்திர சாஹல் தனது அணியின் சக வீரர்களை கிண்டலடிப்பதில் பெயர் பெற்றவர்.இவர் வழக்கமாக போட்டிக்கு பயணிக்கும் போது அல்லது வீரர்கள் தங்கியிருக்கும் அறைக்கு சென்று நகைச்சுவையான கேள்விகளை எழுப்புவார்,அவர் தனது நகைச்சுவை உணர்வைக் கொண்டு ரசிகர்களுக்கு நல்ல சிரிப்பைக் கொடுப்பதில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.
ரிஷப் பந்த் தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரபல கார்ட்டுனான TOM இருக்ககூடிய டிஷர்ட்டை அணிந்துகொண்ட யாரெல்லாம் இந்த கார்ட்டூனை பார்த்துள்ளீர்கள் ? என்று கேட்டிருந்தார்.இதற்கு பதிலளித்த சாஹால்,நீங்கள் எதை கேட்குறீர்கள் ? உங்களையா இல்ல டாமையா என்று கேட்க சற்று திக்குமுக்காடி போய்விட்டார் நம்ம ரிஷப்.
இப்படி விட்டா சரிவராது என்று நினைத்த ரிஷப் உடனே தான் பதிவிட்டதை சற்று மாற்றி யாரெல்லாம் இந்த கார்ட்டூனை என் டிஷர்ட்டில் பார்த்துள்ளீர்கள் என்று மாற்றிவிட்டார்.இதற்கிடையில் ஆப்கானிய சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் அவரும் தனது பங்கிற்கு ஒன்றை கூறியுள்ளார் அதில்,கதாபாத்திரம் மற்றும் பந்த் இரண்டையும் பலமுறை பார்த்திருப்பதாக பதிலளித்துள்ளார்.
View this post on Instagram