Monday, September 20, 2021
HomeCricketSL vs SA :இந்தியாவை பின்பற்றும் தென் ஆப்பிரிக்கா.!? இலங்கை தொடரில் முக்கிய வீரர்கள் விலகல்.!

SL vs SA :இந்தியாவை பின்பற்றும் தென் ஆப்பிரிக்கா.!? இலங்கை தொடரில் முக்கிய வீரர்கள் விலகல்.!

இலங்கை கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூலை மாதம் ODI , டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. அப்போது, இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, தவான் தலைமையில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இந்திய அணி இலங்கை அணியை எதிர்கொண்டது.

தற்போது அதே போல, இலங்கை அணியுடன், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி ODI தொடரில் பங்கேற்க உள்ளது. இதில், பங்கேற்க உள்ள தென் ஆப்பிரிக்கா அணியில் முக்கிய வீரர்களான டி காக், லுங்கி நிகிடி, டேவிட் மில்லர்ஆகியோர் இடம் பெறவில்லை. இந்த வீரர்கள் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து விளக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று முதல் (செப்டம்பர் 2) செப்டம்பர் 14 வரை 3 ODI, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையுடன் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் முழுவதும் இலங்கையில் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments