வரலாற்று சாதனை படைத்த அன்ஷு மாலிக்..!

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நார்வேயில் நடைபெற்றது. 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் மற்றும்  அமெரிக்கா வீராங்கனை முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான ஹெலின் மரோலிசுடன் நேற்று மோதினார். இதில், ஹெலினிடம் , அன்ஷூ மாலிக் தோல்வியை தழுவி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் காரணமாக உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.