Tuesday, September 21, 2021
HomeCricketPak vs SA:13 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானில் நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டி

Pak vs SA:13 ஆண்டுகளுக்கு பாகிஸ்தானில் நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டி

பாக்கிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று  டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.கராய்ச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் வைத்து நடைபெறும் முதல் டெஸ்ட் ஜனவரி 26-30 வரை நடைபெற  இருக்கிறது.கடந்த 2007 ஆம் ஆண்டுக்கு  பிறகு முதல் முறையாக பாகிஸ்தானில்  இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நடக்க இருக்கிறது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி வாசிம் கான் நாட்டிற்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மறக்கமுடியாத அற்புதமான தருணம் என்று வர்ணித்தார். பாக்கிஸ்தானின்  புதிய கேப்டனான பாபர் அசாம் தலைமையில் 17 வீரர்களை  கொண்ட அணியில் பல அனுபவமற்ற மற்றும் இளம் முகங்களுடன் வலுவான தென்னாபிரிக்காவை எத்ரிக்கொள்ளவுள்ளது.

நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் இருந்து பாகிஸ்தான் 0-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.இந்த தொடரில் கட்டைவிரல் எலும்பு முறிவு ஏற்பட்டதால், பாபர் அசாம் முழு உடற்தகுதிக்கு நாடு திரும்பினார்.புதிய கேப்டனான பாபர் அசாம் தலைமையில்  13 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த நாட்டில் டெஸ்ட் தொடர் நடைபெற இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .

பாக்கிஸ்தான் கிரிக்கெட் லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும்  இந்தியாவில் டிவி ஒளிபரப்பு சோனியில் பார்க்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments