இந்தியாவிற்கு எதிரான இங்கிலாந்து அணி பிரயோஜனம் இல்லாத ஒன்று – கெவின் பீட்டர்சன்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இங்கிலாந்து அணி டெஸ்ட் ,டி20,ஒரு நாள் போட்டி என 2 மாதங்களுக்கான சுற்றுப்பயணத்துடன் வந்துள்ளது.இரு அணிகளுக்குக்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டது.இந்நிலையில் இங்கிலாந்து அணியின் தேர்வு குறித்து அந்த அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அவர் பதிவு செய்துள்ள ட்வீட்டில் வலுவான இந்திய அணிக்கு எதிராக பிரயோஜனம் இல்லாத இங்கிலாந்து அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழுவை விமர்சித்துள்ளார்.இது இங்கிலாந்து ரசிகர்களுக்குக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தையும் அவமரியாதை செய்வதுபோல் உள்ளது என்று விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்தின் சிறந்த வீரர்கள் இந்தியாவிற்கு எதிராக விளையாட விரும்புவார்கள் அவர்களை தேர்தெடுங்கள்.பெர்ஸ்டோ,பிராட் ,ஆண்டர்சன் ஆகியோர்களை விளையாட அனுமதிக்க வேண்டும்.இது அவர்களுக்கு ஐ.பி.எல் சென்று தங்களுக்குத் தேவையான அனைத்தையும் சம்பாதிக்க உதவும் ,ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கு பணம் மிகவும் முக்கியம்.அவை ஒரு வணிகம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார் கெவின் பீட்டர்சன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *