Tuesday, September 21, 2021
HomeCricketஇந்தியா, இங்கிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது..!

இந்தியா, இங்கிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது..!

இந்தியா, இங்கிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 183/10 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 64 ரன்கள் விளாசினார்.

209 ரன்கள் வெற்றி இலக்கைத் துரத்தி, நான்காவது நாள் கடைசி செஷனின் இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய இந்திய அணியில், கே.எல்.ராகுல் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ரோஹித் ஷர்மா (12), புஜாரா (12) அவர்கள் களத்தில் இருந்த நிலையில் நான்காவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஐந்தாவது நாளில் இந்திய அணி வெற்றிக்கு 157 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட நிலையில், மழை குறுக்கீடு காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல், போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது.

 

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments